ஞாயிறு, 1 மார்ச், 2015

திருக்குறள் மன்றம் தாளவாடி-


 மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி -வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.








திருக்குறள் மன்றம் தாளவாடி.


மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி- வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.







திருவள்ளுவர் சிலை-கன்னியாகுமரி.


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
      அய்யன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது.
 சிலை குறிப்புகள்  
மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
 சிலை அளவுகள்
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 
அடிதோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி

திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்..

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

  • திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உலக மொழிகளில்!........

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உலக மொழிகளில் திருக்குறள்

ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730ல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் தந்தை பேஸ்ச்சி (Father Beschi) ஆவார்.திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே.

மொழிபெயர்ப்புகள்

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 80மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள்

குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 13 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

ஆசிய மொழிகள்

அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மொழிகள்

செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் நூலாராய்வு

திருக்குறள் நூலாராய்வானது இரண்டு அடிப்படைகளில் செய்யப்படவேண்டியுள்ளன. அவையாவன:
  1. நூலின் அமைப்பு முறை
  2. திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள்

திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை

 மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

அறத்துப்பால் (1-38)
  • பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
  • இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
  • துறவறவியல்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
  • ஊழியல்
38. ஊழ்
பொருட்பால் (39-108)
  • அரசியல்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
  • அமைச்சியல்
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
  • அரணியல்
74. நாடு
75. அரண்
  • கூழியல்
76. பொருள் செயல்வகை
  • படையியல்
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
  • நட்பியல்
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
  • குடியியல்
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

காமத்துப்பால் (109-133)
  • களவியல்
109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
  • கற்பியல்
116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை

திருக்குறள் மன்றம் தாளவாடி-2015

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
                 திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2015 மார்ச் 01 ஞாயிறு (இன்று) முதல்  உலகப்பொதுமறையாம் திருக்குறள் படிப்போம்.பரப்புரை செய்வோம் வாங்க....
என அன்பன்
 பரமேஸ்வரன்.C, 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் 
தாளவாடி கிளை.

புதன், 25 பிப்ரவரி, 2015

குறும்படம் எடுக்கும் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். குறும்படம் எடுப்பவர்கள் கவனிக்க வேண்டியவை.....
  குறும்படம் எடுக்கும் அனைவரும் கவனத்தில் வைக்க வேண்டிய சில அம்சங்கள்.
1. 1990கள்வரை நாடகங்கள் பார்வையாளர்களிடம் ஒரு கதையைப் பரிசோதிக்கப் பயன்பட்டன. ஒரு நாடகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தபோது, அவை அப்படியே திரைப்படமாக எடுக்கப்பட்டன.
ஆனால் அத்தகைய நாடகங்கள் முன்னோட்டம் மட்டுமல்ல. முழுமையான திரைக்கதையைக் கொண்டவை. அதனால்தான், முழுமையான பல நல்ல நாடகங்கள் தமிழ் சினிமாவில் திரைப்படங்களாக மாறிப் பெரும் வெற்றி கண்டன. அனேக குறும்படங்கள் முழுமையான திரைக்கதை அல்ல. அவை அதிகபட்சம், ஒரு முன்னோட்டம் மட்டுமே.
2. குறும்படங்கள் எடுத்த அனுபவம் பெரிய படம் எடுக்க ஒரு பாஸ்போர்ட் அல்லது அறிமுக முகவரி மட்டுமே. பயணச் சீட்டுகள் அல்ல. பாஸ்போர்ட் இருந்தாலும், டிக்கெட் இல்லாமல் எப்படி வெளிநாடு பயணிக்க முடியாதோ, அது மாதிரி பெரிய படத்திற்கான திரைக்கதை இல்லாமல் திரைத்துறையில் பயணிக்க முடியாது. கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமரசாமி போன்றவர்களின் வெற்றி, அவர்களின் குறும்படங்கள் மூலம் காண்பித்த திறமை மற்றும் அனுபவத்தையும் தாண்டி, அவர்கள் உருவாக்கிய புதிய திரைக்கதைகள் அவர்களை வெற்றிகாணச் செய்தன.
3. அதிக பட்சம் 10 – 15 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தில் சொல்லப்பட்ட ஒரு சுவாரசியமான விஷயத்தை 120 முதல் 150 நிமிடம் ஓட வேண்டிய பெரிய படத்திற்குத் திரைக்கதையாக மாற்றுவது எளிதல்ல. தமிழ் சினிமாவில், இதுவரை, பாலாஜி மோகன் மட்டுமே (காதலில் சொதப்புவது எப்படி), ஒரு குறும்படத்தைப் பெரிய படமாக மாற்றி வெற்றிகண்டவர். கடந்த இரு வருடங்களில் அவ்வாறு முயற்சி செய்த மற்றவர்கள் வெற்றியைச் சுவைக்கவில்லை.
4. குறும்படங்களுக்கான இலக்கணங்கள் வேறு, பெரிய படங்களுக்கான இலக்கணங்கள் வேறு. ஒரு குறும்படம் தரும் சுதந்திரத்தை 130-150 நிமிடம் ஓடும் பெரிய படத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு குறும்படத்தை எடுத்து, அதை யூட்யூப் போன்ற ஊடகங்களின் மூலம் பிரபலப்படுத்துவது இன்று பெரிய சாதனை இல்லை. பெரிய படங்கள் எடுக்க இன்று கோடிகளில் பணம் தேவை. அதை மக்களிடம் கொண்டுசெல்ல மேலும் சில கோடிகள் தேவை. பல கோடிகள் தேவைப்படும் ஒரு பெரிய படத்தை இயக்க, வெற்றிப் படமாக்க, நல்ல அனுபவமும், வெகுஜன மக்களுக்குப் பிடித்த படமாக உருவாக்கக்கூடிய திறமையும் தேவை. அதைக் குறும்படங்கள் மூலம் மட்டுமே பெற முடியாது.
5. குறும்படங்களை அனுபவத்திற்காகவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல சாதனமாகவும், நாளைய இயக்குநர்கள் உபயோகிக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட குறும்படங்களில் நல்ல ஒரு பெரிய படம் உருவாகும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அவற்றைப் பெரிய படத்துக்குக்கான திரைக்கதையாக மாற்ற வேண்டும். 10 நிமிடத்திலேயே முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை, 120-150 நிமிடங்களுக்கு நீட்டிக்கப் போராடுவது அனைவருக்கும் கஷ்டத்தில்தான் முடியும்.
6. எப்படியாவது காட்சிகளை அடுக்கி, ஒரு குறும்படத்தைப் பெரிய படமாக மாற்றும் முயற்சி வீணே. 10 நிமிடக் குறும்படத்தில், ஒரு தொடக்கம், ஒரு விஷயம், ஒரு முடிவு எனச் சொல்லப்பட்டால் போதும். ஆனால் ஒரு பெரிய படத்தில், 10-15 நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பங்களை ஏற்படுத்தினால்தான் திரைக்கதை சுவாரசியமாகச் செல்லும்.
குறும்படங்கள் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை உருவாக்கிவருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அவைகளை அறிமுகமாக மட்டும் எடுத்துக்கொண்டு, முடிந்தால் நல்ல இயக்குநர்களிடமும் பயிற்சி எடுத்து, புதிதாக வெகுஜன ரசனைக்கான திரைக்கதைகளை உருவாக்கும்போது, வாய்ப்பும் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
  1. குறும்பட இயக்குனர் ஆவது எப்படி?
  2. குறும்படத்திற்கு கதை எந்த அளவு முக்கியம்?
  3. கதை எழுதும் எல்லாராலும் டைரக்ட் செய்ய முடியுமா இல்லை தொழில் நுட்ப அறிவு தேவையா?
  4. கதை விவாதங்களில் டேச்னிகள் டீம் இருப்பது அவசியமா? 
  5. உங்கள் கதை விவாதம் எப்படி எந்த சூழ்நிலையில் நடைபெறும்? 
  6. குறும்படத்தில் பெண்களை நடிக்க வைப்பதில் இருக்கும் சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்வது எப்படி? 
  7. படத்திற்கான பட்ஜெட், லொகேஷன் மற்றும் இதர விசயங்களை கையாள்வது எப்படி?


குறும்படம் என்றால்?......

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.குறும்படம் என்றால் என்ன என்று பார்ப்போம்.


குறும்படம் என்றால் என்ன?
                முதலில் குறும்படம் என்றால் படக்கருவி மூலம் படம்பிடிக்கும் அனைத்தும் குறும்படம் ஆகமுடியாது. ஒரு முழுநீளப்படத்திற்க்கான இலக்கணங்கள் எல்லாமுமே குறும்படத்திற்கும் பொருந்தும். கதை, திரைக்கதை போன்ற படப்பிடிப்பிற்கு முன்னர் செய்யவேண்டிய முன்தயாரிப்பு வேலைகளும், படத்தொகுப்பு, இசையமைத்தல் போன்ற பிற்சேர்க்கை வேலைகளும் ஒரு குறும்படத்திற்கு தேவைதான். அவை இல்லாவிட்டால் படத்துணுக்குகளை ஒட்ட வைத்த ரசிகத்தன்மை சிஞ்சித்தும் இல்லாத கண்றாவி கோர்வையாக அமையும். வேண்டுமானால் சில இலக்கியவாதிகளை அழைத்து பின்னவினவத்துவ விருந்து என்று பொய் சமைக்கலாம். 40 நிமிடங்களுக்கு உட்பட்ட படங்களைதான் குறும்படம் என்று வகைப்படுத்துகிறது ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அக்காதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். இதையே குறும்படத்திற்கான கால அளவாக பெருவாரியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பெரும்பான்மையான குறும்படங்கள் 10 நிமிடங்களுக்கு உட்பட்டே இருப்பதை காணலாம். இதற்கு படம் எடுக்க ஆகும் செலவே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். ஆனாலும் 10 நிமிடத்திற்குட்பட்ட படங்களை இணையத்தில் எளிதில் வெளியிடமுடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.
முழுநீளப்படங்கள் போலவே குறும்படங்களிலும் பல்வேறு பாணிகள்(genre) உள்ளன. ஆனாலும் ஆவணப்படங்கள். அறிவுரைப்படங்கள், கதைப்படங்கள் என்று புரிதலுக்காய் எளிமைப்படுத்தி மூன்றாய் பிரித்துக்கொள்ளலாம். இன்று குறும்படம் எடுப்பவர்கள் முதலில் இதை தீர்மானத்துகொண்டு தன் படங்களை எடுக்கவே ஆரம்பிக்க வேண்டும். எந்த பாணியில், எந்த வகையில் படம் எடுத்தாலும் அதற்கான திரைக்கதை அமைப்பது மிக முக்கியமான பணியாகும். இன்று இணையத்தில் இரைந்துகிடக்கும் குறும்படங்களில், அதுவும் குறிப்பாக தமிழ் குறும்படங்களில் இல்லாத வஸ்து இந்த திரைக்கதைதான் (முழுநீளப்படங்களிலும் அது இல்லை என்பது வேறு சமாச்சாரம்). சொல்லவந்த செய்தியை வெகு குறுகிய கால அளவில் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பதால் திரைக்கதை கட்டமைப்பு இறுக்கமாகவும் பார்வையாளரின் ஈடுபாட்டையும் கவனத்தையும் கவர்வதாக அமைக்கப்படவேண்டும். ஆவணப்படங்கள் / அறிவுரைப்படங்கள் எடுப்பவர்கள் தங்கள் குறும்படத்திற்கு திரைக்கதை தேவையில்லை நடப்பதை அப்படியே எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். அனுபவமிக்கவர்களே சறுக்கி விழும் இடம் இதுதான்.
கருத்துப்படங்களானாலும் ஆவணப்படங்களானாலும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாவிட்டால் பார்வையாளர்கள் ஈடுபாட்டுடன் ரசிக்க இயலாது. இவ்வகைப்படங்களில் பொதுவாக கீழ்கண்ட பகுதிகளாய் இருப்பதை பார்க்கலாம்
1. ஒரு சமூக ப்ரச்சனை
2. அந்த ப்ரச்சனையின் தீவிரம் / பாதிப்பு
3. அதற்க்கான தீர்வுகள்
சாதாரண புகைபிடித்தலில் உள்ள தீமைகளை விளக்கும் 2 நிமிடப்படமானாலும் சரி மைக்கேல் மூரின் சிக்கோ போன்ற படமானாலும் இப்படியாப்பட்ட ஒரு எளிய கட்டமைப்பை கொண்டதாகவே இருக்கும். இதில் ப்ரச்சனைகளின் தீவிரத்தை காட்சிப்படுத்தும்போது, பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் உணர்ந்த அல்லது சந்தித்த ஒரு களத்தை வைத்து விளக்கினால் பார்வையாளனால் நன்றாக ஒன்ற முடியும்.
வெற்றி பெற்ற கதை குறும்படங்களிலும் கீழுள்ள ஒரு கட்டமைப்பை காணலாம்
1. முக்கிய பாத்திர அறிமுகம்
2. பாத்திரம் சந்திக்கும் பிரச்சனைகள்
3. பிரச்சனைகளுக்கான தீர்வை பாத்திரம் கண்டுபிடிப்பது/அடைவது
பெரும்பான்மையான முழுநீளப்படங்களுக்கு இந்த கட்டமைப்பு பொருந்தி வருவதை பார்க்கலாம். ஆனால் முழுநீளப்படங்களில் இன்னும் அதிகமான துணைக்கதைகள் இருக்கவேண்டும். பாத்திரத்தை சுற்றி நடப்பவை, உப/துணை  பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று இணைப்பது சுவாரஸ்யத்தை கூட்டும். ஆனால் குறும்படத்தின் நீளம் காரணமாக அவ்வகையான பகட்டுகள் எல்லாம் குறும்படத்திற்கு ஒத்து வராது. ஒரு குறும்படத்தை ஒரு சிறுகதைக்கான கட்டுமானத்தோடு ஒப்பிடலாம். ஒரு சிறுகதை எப்படி உச்சகட்டத்திற்கு மிக அருகில் ஆரம்பிக்கப்படவேண்டுமோ, அதைப்போலவே ஒரு குறும்படமும் உட்டகட்ட காட்சிக்கு மிக அருகாமையில் துவங்கப்படவேண்டும். அதைப்போலவே வருடக்கணக்கில் நடக்கும் கதைகள் குறும்பட அமைப்பிற்கு ஒத்து வராது. ஒரு சிறிய நிகழ்வோ அல்லது அந்த நிகழ்வு நிகழ்வதற்கான களனை சார்ந்தோ திரைக்கதை அமைப்பது சுவாரஸ்யத்தைக்கூட்டும்.
குறும்படம் எடுக்க என்ன தேவை?
கையில் படப்பிடிப்பு கருவி கிடைத்ததும் நானும் குறும்படம் எடுக்கிறேன் என்று கிளம்பிவிடுதால்தான் இயல்பாக நடக்கக்கூடியது. ஆனால் நல்ல குறும்படங்கள் முன்பே கூறியதுபோல முன் தயாரிப்பு, படப்பிடிப்பு, பிற்சேர்க்கை என்ற மூன்று நிலைகளில் ஒரு முழுநீளப்படத்திற்குரிய எல்லா படலங்களையும் வரிசைச்சிரமாக செயல்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு படலத்திலும் நடைபெற வேண்டிய முக்கிய செயல்களை கிழே உள்ளன:
முன் தயாரிப்பு:
                கதை தயாரித்தல்
                திரைக்கதை அமைத்தல்
                ஸ்டோரி போர்ட் அல்லது கதைப்பலகை - முழுகதையையும் ஓவியங்கள் மூலம் விளக்குவது
                காட்சி கோணங்களின் பட்டியல்
                பட்ஜெட் தயாரிப்பு
                நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேர்ந்தெடுப்பு
                படப்பிடிப்பிற்கு தேவையான அனுமதி ஆவணங்கள்
               
படப்பிடிப்பு:
                உணவு பரிமாற்றம்
                பட சேமிற்பிற்கான வந்தகடு/குறுந்தகடுகளை தயாராக வைத்திருத்தல்
                லைட்டிங் / ஒளிஅமைப்பு
                படப்பிடிப்பில் நடிகர்கள் / டெக்னிசியன்களின் பாதுகாப்பு

பிற்சேர்க்கை:
                படத்தொகுப்பு / ஒளி அமைப்பு (கலர் கரெக்‌ஷன்)
                இசை / ஒலி அமைப்பு
                வெளியீடு
ஒர் சாதாரண குறும்படத்திற்கு இத்தனை விரிவான செயல்திட்டம் எல்லாம அவசியமா என்ற கேள்வி எழலாம். ஒரு நல்ல குறும்படத்திற்கான குறைந்தபட்ச செயல்திட்டமே இது. இதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. உங்கள் நேரத்திற்கேற்றவாறு கண்டிப்பாக மாற்றி அமைக்கலாம். ஆனால் ஒரு திட்டத்துடன் குறும்படத்தை எடுக்க ஆரம்பித்தால் பின்னர் வரும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
குறும்பட டிப்ஸ் / இடறுகுழிகள்:
10 நிமிடப்படம்தானே ரெண்டு மணி நேரத்தில் எடுத்து முடித்துவிடலாம் என்று முதன்முதலில் படமெடுக்க கிளம்புபவர்கள் அது எத்தனை தவறான கருத்து என்பதை முதல் 30 நிமிடத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். ஒரு படம் எடுப்பது ஒரு தனிநபர் காரியமல்ல, ஒரு குழுவினராய் செயலாற்றி நிறைவேற்ற வேண்டிய கூட்டுப்பணி. அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் குழுவினர் முழுவதுமே பாதிப்புக்குள்ளாவார்கள்.  அதனால்தான் ஒரு சரியான செயல்திட்டம் வகுப்பது மிக முக்கியமாகிறது. எனக்கு தெரிந்த டிப்ஸ் மற்றும் இடர்களை முடிந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன்.
1. திரைக்கதையை முடிந்தவரை அதற்குரிய வடிவத்திலேயே எழுதப்பழகுங்கள். அதையே மற்றவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கும் பயன்படுத்துங்கள். செல்டெக்ஸ் போன்ற இலவச மென்பொருட்களை பயன்படுத்துவது செலவை குறைப்பதுடன் திட்டமிடுதலுக்கும் பல நல்ல செயலிகளை கொண்டுள்ளது. ஒரு பக்க கதை படத்தில் ஒரு நிமிட நேரத்திற்கு ஒடும். ஒரு பக்கத்தை காட்சிப்படுத்த ஒன்னரை - இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். அதனால் செல்டெக்ஸில் ஐந்து பக்க திரைக்கதை, முடிவில் 5 நிமிடம் ஓடும் படமாக வரும். அதை படம்பிடித்து முடிக்க எட்டு முதல் பத்து மணிநேரம் வரை பிடிக்கும்.
2. ஒரு கதாபாத்திரத்தின் வசனம் 10-12 வார்த்தைக்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். படக்குழுவினரும், நடிகர்களும் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்களாக இல்லாதபட்சத்தில், ஆறு - எட்டு வார்த்தைக்கு மேற்ப்பட்ட வசனங்களை இயல்பாக ஏற்ற இறக்கத்துடன் நீங்கள் நினைக்கும் வகையில் பேச வைப்பது மிகவும் கடினம். அதனால் வசனங்களின் அளவை குறைப்பது நல்லது. மேலும் பெரிய வசனங்கள் காட்சிகளை நீளமடையவைத்து பார்வையாலர்களை சலிப்பைடைய வைக்கும்.
3. காட்சிக்கோணங்களையும், காட்சி வரிசையையும் முன்தயாரிப்பிலேயே முடிவு செய்து கொள்ளுங்கள். படப்பிடிப்பு சம்யத்தில் லைட்டிங், கேமராவின் குறைபாடுகள் போன்றவற்றால் சில காட்சிகளின் அமைப்பு கோணங்களை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாவிட்டாலும், முன்னரே தீர்மானிப்பது படப்பிடிப்பு நேர அலைச்சல்களையும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம்.
4. படப்பிடிப்பில் நேரும் டெக்னிக்கல் விசயங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணமே வரக்கூடாது. குறிப்பாக நிறங்கள், லைட்டிங் போன்ற சமாச்சாரங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திவிடலாம் என்ற நினைப்பிற்கு இடம் தரக்கூடாது. பிற்சேர்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை படப்பிடிப்பிற்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும்.
5. நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்தாலும் அவர்களுடைய நேரம், பங்களிப்பு ஆகிவற்றை பற்றி முன்பே வரையறுத்து கூறிவிடுங்கள். யாராருக்கு எந்த துறை, எந்தவிதமான பங்களிப்பு, மற்றவர்களுடன் இருக்கும் சார்புநிலை ஆகிவற்றை முன்பே விலக்கிவிடுதல் நலம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் 15-30 நிமிடங்கள் இதை தெளிவுபடுத்திவிடுவது நல்ல வாடிக்கை. நண்பர்களின் பங்களிப்பிற்கு தக்க அங்கீகரிப்பை செலுத்தவும் மறக்ககூடாது.
6. படக்கோணங்களை ஒளிப்பதிவாளரிடம் முன்னரே பேசி தெளிவுபடுத்திவிடுங்கள். ஒளி அமைப்பிற்கும் படக்கருவியை வைக்க தகுந்த இடம் போன்றவற்றை அவர் தயார் செய்ய அது உதவும். 
7. குறும்படங்களில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுக்க நம் பட்ஜெட் ஒத்து வராவிட்டாலும், கலைஞர்களுக்கு குறைந்தபட்ச உணவவையாவது வழங்குவதற்க்கான பட்ஜெட் செய்வது பண்பு.
8. ஒரு காட்சி/கோணத்தைப்பற்றி சந்தேகம் இருந்தால், படப்பிடிப்பிற்கு முன்பே டெஸ்ட் சூட் செய்துவிடுவது நல்லது. படப்பிடிப்பில் டெஸ்ட் செய்துகொண்டிருந்தால் குழுவினருக்கு டைரக்டர் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.
9. முடிந்தால் கலைஞர்களின் திறமையை கண்டறிய ஆடிசன் வைப்பது நல்லது. அப்படி ஆடிசன் நடக்கும் போது கையில் உள்ள சிறிய கேமராவாகினும் அதை படம்பிடித்து கொள்ளுங்கள். பின்னர் சரியான கலைஞர்களை தேர்ந்தெடுக்க உகர்ந்ததாக இருக்கும்.
10. ரிகர்சல் / ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஒத்திகை நடப்பது சிறப்பு. பெரும்பான்மையான கலைஞர்கள் இதை பொழுதுபோக்காக செய்ய வருவதால் ஒத்திகை அவர்களுடைய பங்களிப்பை மேன்மைபடுத்த உதவும். ஒத்திகையையும் படம்பிடித்தால் தவறுகளை திருத்த உதவும்.
முக்கியமான கட்டளையாக -
டைரக்டர்தான் கேப்டன் என்பதை தீவிரமாக செயல்படுத்துங்கள். சினிமா / படப்பிடிப்பு என்பது நம் மக்கள் அதீத விருப்பு கொண்டுள்ள ஒரு விசயம். படப்பிடிப்பை பார்வையிட வந்த நண்பருக்கு கூட காட்சி அமைப்பில் சில கருத்துகள் இருக்கலாம், டெண்டுலகருக்கே கிரிகெட் கற்றுத்தரும் துடிப்புடன் களத்தில் குதிக்க தயாராக நண்பர்கள் சுற்றிலும் இருக்கலாம். நடிகர்களின் நடிப்பை பற்றிய மாற்றங்களை சொல்ல நினைக்கலாம். ஆனால் அதை டைரக்டரிடமோ அவரது உதவியாளரிடமோ தெரிவிக்கலாமோ அன்றி, படக்குழுவினரையும், நடிகர்களையும் வெளி நபர்களோ மற்ற படக்குழுவினடிடத்திலோ நேரடியாக கருத்து / மாற்றங்களை சொல்ல அனுமதித்தல் கூடாது. டைரக்டர் மட்டுமே மொத்த குழுவினரையும் வழிநடத்தவேண்டும். நீங்கள் டைரக்டராக இல்லாத பட்சத்தில் இதையே கடைப்பிடித்து டைரக்டரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள்.
குறும்படத்திற்கு இத்தனை திட்டங்களா என்று தளர்ந்துவிடாதீர்கள், முன்பே சொன்னது போல இந்த திட்டங்களை எல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஒரு முறை சென்று பார்வையாளராக சென்றி கவனித்துவிட்டு வாருங்கள்.
இனி என்ன, குறும்படம் எடுக்க கேமராவை கையில எடுத்துட்டீங்களா? அதான் தப்பு... அப்ப கட்டுரையை இன்னொருக்கா முதல்ல இருந்து படிங்க!